டோனியை விமர்சித்த நபர்களுக்கு சரியான பதிலடி.. மாஸ் காட்டிய கோஹ்லி

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர வீரர் டோனியின் துடுப்பாட்டம் குறித்து விமர்சித்த நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பேட்டியளித்துள்ளார்.

பர்மிங்காமில் உள்ள மைதானத்தில் நாளை இங்கிலாந்து-இந்தியா அணிகள் மோதவுள்ள நிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டார்.

இதில் பேசிய கோஹ்லி, தான் என்ன செய்ய வேண்டும் என்பது டோனிக்கு நன்றாக தெரியும். அவர் என்ன செய்ய வேண்டும் என்று மாற்றவர்கள் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வெளியில் பல சம்பவங்கள் நடைபெறுகிறது, ஆனால், எங்கள் அனுபவங்கள் மற்றும் உடை மாற்றும் அறைக்கு உள்ளே என்ன நடக்கிறதோ அது தான் எங்களுக்கு மிக முக்கியம்.

டோனி மீது எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவர் பல முறை அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். குறிப்பாக, இந்த வருடம் அவர் விளையாடிய போட்டிகளை பார்த்தால் அவரின் செயல்பாடு தெரியும். ஒன்று, இரண்டு போட்டியை வைத்து அவரின் செயல்பாட்டை மதிப்பிடக்கூடாது. கண்டிப்பாக அனைவரும் ஒரு, இரு போட்டிகளில் தடுமாறு வார்கள்.

ஆப்கானிஸ்தான் போட்டிக்கு பின்னர், அவர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். நாங்கள் வெற்றிப்பெற்றோம். இதன் மூலம் இரண்டு புள்ளிகள் கிடைத்தது, எனவே நாங்கள் ஒரு அணியாக எப்படி இருக்கிறோம் என்பதையும், தற்போது துடுப்பாட்டம் எவ்வாறு நடக்கிறது என்பதையும் பற்றி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக, நம்பிக்கையாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

புதிய சீருடை குறித்த பேசிய கோஹ்லி, புதிய சீருடை உண்மையில் நன்றாக தான் உள்ளது. ஒரு போட்டிக்கு இந்த மாற்றம் போதுமானது. இந்த சீருடை தற்காலிகமானது தான், நிரந்திரமாக அணிவோம் என நினைக்கவில்லை. நீலம் எப்போதும் எங்கள் நிறமாக இருக்கிறது. அதை அணிவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்