விக்கெட் எடுத்துவிட்டு நிற்காமல் ஓடிய தாஹிர்: கோபித்துக்கொண்ட ரபாடா!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின்போது விக்கெட் எடுத்துவிட்டு இம்ரான் தாஹிர் நிற்காமல் ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் போட்டியில் 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி இதுவரை 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி உலகக்கிண்ணம் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், இமாம்-உல்-ஹக் அடித்த பந்தை அசால்ட்டாக கேட்ச் பிடிக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், கடினமான கேட்ச் பிடித்த இம்ரான் தாஹிரை பாராட்டுவதற்காக ரபாடா அவரை விரட்டி ஓடுவார். ஆனால் நிற்காமல் இம்ரான் தாஹிர் ஓடிக்கொண்டே இருந்ததால், ரபாடா கோபித்துக்கொண்டு பாதியிலே நிற்பதை போல அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்