இலங்கைக்கு நெருக்கடி.. தோல்விக்கு காரணம் இவர்கள் தான்: கொந்தளித்த அணித்தலைவர்

Report Print Basu in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வியினால் இலங்கை அணி உலகக் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிப்பெற்றது.

தோல்விக்கு பின் பேட்டியளித்த இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியதாவது, தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்கு மத்திய வரிசை வீரர்களின் பொறுப்பற்ற துடுப்பாட்டமே காரணம்.

ஆரம்பத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்திருந்தது. எனினும், மத்திய வரிசையில் விட்ட தவறினால் 96 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்தது.

இதற்கு முன் நடைபெற்ற பெரும்பாலான போட்டிகளிலும் இதே நிலைமையை காண முடிந்தது. குறிப்பாக அனுபவமிக்க வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமும் இதற்கான காரணமாக அமைந்திருந்தது என இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் போட்டிகளில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்க தேச அணிகள் தோல்வி அடைந்தால் இலங்கை அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்