பாண்ட்யாவிடம் நிறைய தப்பு இருக்கு.. நான் அவருக்கு பயிற்சி தருகிறேன்! முன்னாள் பாகிஸ்தான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு பயிற்சி தர தயாராக இருப்பதாக, முன்னாள் பாகிஸ்தான் அணி வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த லீக் போட்டியில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஹர்த்திக் பாண்ட்யா 48 ஓட்டங்கள் விளாசினார். ஆனால், அவரது துடுப்பாட்டத்தில் டெக்னிக்கலாக தவறு இருப்பதாக கூறி முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக விளங்கியவர் அப்துல் ரசாக். தற்போது பயிற்சி, கிரிக்கெட் விமர்சகர் என கிரிக்கெட் தொடர்பான பணிகளில் ஈடுபட்டு வரும் ரசாக், தற்போது ஹர்த்திக் பாண்ட்யாவின் துடுப்பாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் அப்துல் ரசாக் கூறுகையில், பாண்ட்யாவின் உடல் சம நிலையிலும், பந்தை அடித்து ஆடும்போது அவரது கால்கள் நகர்வதிலும் சில தவறுகள் உள்ளது. அது அவருக்கு சில சமயம் சிரமத்தை அளிக்கிறது.

பி.சி.சி.ஐ விரும்பினால் பாண்ட்யாவுக்கு பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறேன். தலை சிறந்த ஆல்-ரவுண்டராக பாண்ட்யாவை மாற்றாவிட்டாலும், சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவராக அவரை மாற்ற முடியும்’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், அப்துல் ரசாக்கின் இந்த ட்வீட் குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்களை விட்டுவிட்டு இந்திய வீரருக்கு பயிற்சி அளிக்க ஏன் அவர் விரும்புகிறார் என்று கேட்டுள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்