இந்திய அணியின் புதிய ஜெர்சியில் டோனி எப்படியிருக்கிறார்? சர்ச்சைக்கிடையில் வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்திய அணியின் உடை மாற்றப்பட்டுள்ள நிலையில் டோனியின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணி தொடரிலிருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், இந்திய அணியின் புதிய உடையை ஐசிசி வெளியிட்டது.

அதாவது, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தற்போது புதிய விதிமுறை ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன் படி போட்டியில் மோதும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க முடியாது இதனால் ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடையில் களமிறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தொடரை நடத்தும் இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளதால், அந்தணி உடையை மாற்றது. அந்தணியுடன் இந்தியா மோதும் போது இரு அணியின் உடையும் ஒரே நிறத்தில் இருக்கும் என்பதால், இந்திய அணி தன்னுடைய உடையில் மாற்றம் கொண்டு வரவுள்ளதாக கூறப்பட்டது.

இந்திய அணியின் புதிய உடையில் காவி நிறம் இருப்பதாகவும், இது மத்தியில் ஆளும் பாஜகவின் யோசனையே இது என்று சர்ச்சை எழுந்தது.

ஆனால் வெளியான உடையில் காவி நிறம் இருப்பது போன்று இல்லை எனவும் கூறப்பட்டு வருகிறது,

இந்நிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் டோனி இந்திய அணியின் புதிய உடையை அணிந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்