உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு இவரே காரணம்... புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருவதற்கு டோனி தான் முக்கிய காரணம் என்று லட்சுமணன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மிரட்டலான ஆட்டத்தை கொடுத்து வருகிறது.

இந்த தொடரில், டோனியின் மந்தமான ஆட்டம் பல விமர்சனங்களை பெற்றிருந்தாலும், டோனி தான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு என்று முன்னாள் வீரர் லட்சுமணன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், பொதுவாக டோனி தனது அனுபவத்தை மற்ற வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவர்.

பல போட்டிகளிலும் ஐபிஎல் தொடர்களிலும் இதனை நாம் கண்டிருக்கிறோம். விராத் கோஹ்லி கேப்டன் பொறுப்பு ஏற்ற பிறகு, இக்கட்டான சூழ்நிலைகளில் டோனியை அணுகி அவரின் வழிமுறைகளை பின்பற்றுவதையும் நாம் கண்டிருக்கிறோம்.

அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று தந்துள்ள ஒரு அனுபவமிக்க வீரரை தனது டிரஸ்ஸிங் ரூமில் இந்தியா கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் ஒன்று. இந்திய வீரர்களை நல்ல மனநிலையில் வைத்திருப்பதற்கு டோனி முக்கிய பங்கு வகிக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்