உலகக் கோப்பை தொடரிலிருந்து நட்சத்திர வீரர் விலகல்..மேற்கிந்திய தீவுகளுக்கு பெரிய அடி

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் வெளியேறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல் ரவுண்டரான ஆண்ட்ரே ரசலே இவ்வாறு விலகியுள்ளார். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி வீரர் ரசலுக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ் மேற்கிந்திய தீவுகள் அணியில் இணைகிறார்.

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 1 வெற்றி, 4 தோல்வி, 1 போட்டி ரத்து என 3 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் யூன் 27ம் திகதி இந்தியாவுடன் மோதவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, அதை தொடர்ந்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளது.

அரையிறுதிக்கு முன்னேற எதிர்வரும் போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது. இச்சமயத்தில், ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளது உலகக் கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers