உலகக்கோப்பையில் விஸ்வரூபமெடுத்த வங்கதேச வீரர்! அதிக ஓட்டங்களில் இவர்தான் முதலிடம்

Report Print Kabilan in கிரிக்கெட்

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஷகிப் அல் ஹசன் இந்த உலகக்கோப்பையில் அதிக ஓட்டங்கள் எடுத்துள்ள வார்னரை முந்தியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் துடுப்பாட்ட வீரர்கள் மிரட்டி வருகின்றனர்.

ஆனால், இவர்கள் அனைவரையும் முந்தி வங்கதேச வீரர் ஒருவர் ஆச்சரியப்படுத்தி வருகிறார். வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஷகிப் அல் ஹசன் நடப்பு தொடரில் இரண்டு சதங்கள், மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.

தனது மிரட்டலான ஆட்டத்தினால், தற்போது 7 போட்டிகளில் 476 ஓட்டங்களை ஷகிப் அல் ஹசன் குவித்துள்ளார். இதன்மூலம், முதல் இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரை (447 ஓட்டங்கள்) முந்தியுள்ளார்.

கடந்த போட்டியுடன் 425 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷகிப், தற்போது நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 51 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம் 2019 உலகக்கோப்பை தொடரில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

2019 உலகக்கோப்பை - அதிக ஓட்டங்கள்
  • ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) - 476 (7 போட்டிகள்)
  • டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா) - 447 (6 போட்டிகள்)
  • ஜோ ரூட் (இங்கிலாந்து) - 424 (6 போட்டிகள்)
  • ஆரோன் பிஞ்ச் (அவுஸ்திரேலியா) - 396 (6 போட்டிகள்)
  • கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) - 373 (4 போட்டிகள்)

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers