இலங்கை வெற்றிக்கு இங்கிலாந்து அணித்தலைவர் தான் காரணம்: தனன்ஜய ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணி பெற்ற வெற்றிக்கு இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் தான் காரணம் என இலங்கை வீரர் தனன்ஜய சில்வா கூறியுள்ளார்.

கடந்த 21ம் திகதி லீட்ஸ், ஹெடிங்லி மைதானத்தில் நடத்த உலகக் கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது. சிறப்பாக பந்து வீசிய இலங்கை பந்து வீச்சாளர் தனன்ஜய சில்வா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் இலங்கை வெற்றி குறித்து தனன்ஜய சில்வா கூறியதாவது, இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் உலகக் கிண்ணத்துக்கு முன்னர், இலங்கை அணி தொடர்பில் வெளியிட்டிருந்த கருத்து ஒன்று சமுகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

ஊடகவியலாளர் ஒருவர், உலகக் கோப்பையில் ஜொப்ரா ஆர்ச்சரா ஆச்சரியமாக திகழ்வாரா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்திருந்த மோர்கன், உலகக் கோப்பையில் இலங்கை அணி ஆச்சரியங்களை கொண்டுள்ளது. இலங்கை அணியில் 10 புதிய வீரர்கள் உள்ளனர். அவர்களை இதற்கு முன்னர் நான் எதிர்கொண்டதில்லை. எனவே, இலங்கை அணிதான் ஆச்சரியமான அணி என குறிப்பிட்டிருந்தார்.

மேற்குறிப்பிட்டவாறு இயன் மோர்கன் ஊடகங்களிடம் வெளியிட்டிருந்த கருத்து இலங்கை அணியை ஊக்கப்படுத்தியிருந்ததாகவும், குறித்த உத்வேகம் அந்த அணியை வீழ்த்துவதற்கான முக்கிய காரணமாக இருந்ததாகவும் தனன்ஜய சுட்டிக்காட்டி உள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers