இலங்கையின் அரையிறுதி வாய்ப்பை காப்பாற்றிய ஹீரோ மலிங்கா... பேசிய வாய்களுக்கு பூட்டு

Report Print Santhan in கிரிக்கெட்

இங்கிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் மலிங்கா சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பை காப்பாற்றியுள்ளார் என்றே கூறலாம்.

இங்கிலாந்தில் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டி இலங்கை அணிக்கு வாழ்வா?சாவா? என்ற நிலை இருந்தது.

இந்த போட்டியில் தோற்றால் அடுத்து ஏதேனும் அதிர்ஷ்டம் அடித்தால் மட்டும் தான் இலங்கை அணிக்கு வாய்ப்பு, ஆனால் அதே சமயம் போட்டியில் ஜெயித்தால் உறுதியாக இலங்கை அணியின் அரையிறுதி வாய்ப்பிருக்கிறது என்று கூறலாம்.

ஆனால் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை, இலங்கை அணி எப்படி சமாளிக்கும்? அதுமட்டுமின்றி இலங்கை அணியில் முக்கிய பந்து வீச்சாளர் மலிங்கா சரியான பிட்னஸ் இல்லாமல் இருக்கிறார். அவர் விக்கெட் எடுத்து ஜெயிக்கவா என்றெல்லாம் கிண்டல்கள் வந்தன.

இதை எல்லாம் தவிடு பொடியாக்கும் அளவிற்கு நேற்றைய போட்டியில் இலங்கை அணி வீரர்கள் அனல் பறந்தனர். பீல்டிங் அற்புதமாக இருந்தது. சில பிடிக்க முடியாத கேட்சுகளை பிடித்து காட்டி இங்கிலாந்து அணியை கதி கலங்க வைத்தனர்.

பிட்னஸ் இல்லாத மலிங்கா என்று கூறி அனைவரும் நேற்று வாயை மூடினர். ஏனெனில் நேற்று மலிங்கா இங்கிலாந்து அணியின் முக்கிய வீர்ர்களான பேர்ஸ்டோவ், வின்ஸ், பட்லர் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை தன்னுடைய அற்புதமான யார்க்கர் பந்து வீச்சு மூலம் வெளியேற்றினார்.

மங்கிப்போயிருந்த அரையிறுதி வாய்ப்பு மலிங்கா எடுத்த நான்கு விக்கெட்டுகள் மூலம் பிரகாசமாகியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்திய தீவு மற்றும் இந்தியா அணிகளுடன் இலங்கைக்கு போட்டிவுள்ளது. நேற்றைய போட்டி போன்றே வரும் போட்டிகளில் அசத்தினால் அரையிறுதியில் நாம் இருப்பது உறுதி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers