பன்றி மாதிரி இருக்க... பாகிஸ்தான் கேப்டனை பொது இடத்தில் அசிங்கப்படுத்திய ரசிகரின் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி சொதப்பி வரும் நிலையில், அந்தணியின் கேப்டனை ரசிகர் ஒருவர் பன்றி போன்று இருக்கிறீர்கள் என்று கூறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பரிதாப தோல்வியை சந்தித்தது.

இதனால் பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பிராஸ் கான் இங்கிலாந்தில் இருக்கும் மால் ஒன்றிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரை அழைத்து ஹிந்தியில் உங்களது உடல் மிகவும் பெருத்துள்ளது. தற்போது பன்றி போல உள்ளீர்கள். உடலை குறைத்து விளையாடுங்கள் எனக் கூறினார்.

அதற்கு பதில் அளிக்காமல் அந்த இடத்திலிருந்து சர்ப்பிராஸ் அஹ்மது விரைவாக நகர்ந்து சென்றார். அதனை ரசிகர் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பதிவேற்றி உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்