மைதானத்தில் ஆர்ப்பரித்த பெண் ரசிகைகள்.. இலங்கை வெற்றி தருணத்தின் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில் இங்கிலாந்து அணியை இலங்கை வீழ்த்திய நிலையில் வெற்றி தருணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று லீட்சில் அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மோதியது.

இப்போட்டியில் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பரபரப்பான கட்டத்தில் கடைசி விக்கெட்டான மார்க் உட் இலங்கை வீரர் பிரதீப் பந்துவீச்சில் அவுட்டாகி இங்கிலாந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதையடுத்து வெற்றி பெற்ற இலங்கை வீரர்கள் மகிழ்ச்சியில் துள்ளினர்.

மேலும் மைதானத்தில் குவிந்திருந்த இலங்கை அணி ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் தங்கள் அணி வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers