பாகிஸ்தான் அணியில் இருந்து கொண்டு இந்திய அணி வாழ்த்து தெரிவித்த வீரர்: கடும் ஆத்திரத்தில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி உலகக்கோப்பை வெல்ல வாழ்த்துகிறேன் என்று கூறிய பாகிஸ்தான் வீரரின் டுவிட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், உலகக்கோப்பையையும் வெல்லவும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இதைக் கண்ட பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹசன் அலி, உங்கள் விருப்பம் நிறைவேறட்டும் அதற்கு வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவரின் இந்த டுவிட் பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், டுவிட் போட்ட சில நிமிடங்களிலே அதை அவர் நீக்கிவிட்டார். இருப்பினும் ஒரு பாகிஸ்தான் வீரராக இருந்து கொண்டு, எப்படி இப்படி சொல்ல முடிகிறது என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி இந்திய அணிக்கெதிரான போட்டியில் 9 ஓவர்கள் வீசிய ஹசன் அலி 89 ஓட்டங்கள் வாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.]

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்