இப்படி விளையாடுங்க.. இலங்கை அணிக்கு ஜம்பவான் ஜெயசூர்யா டிப்ஸ்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்துடன் மோதவுள்ள இலங்கை அணிக்கு முன்னாள் நட்சத்திர வீரரும், ஜம்பவானுமான சனத் ஜெயசூர்யா ஆலோசனை வழங்கியுள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இன்று யூன் 21ம் திகதி ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ஒரு நாள் போட்டியில் சர்வதேச தரிவரிசையில் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி, 9வது இடத்தில் உள்ள இலங்கை அணியுடன் மோதவுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடிவுள்ள இலங்கை அணி 1 வெற்றி, 2 தோல்வி, 2 போட்டிகள் ரத்து என நான்கு புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. எதிர்வரும் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நிலையில் இலங்கை அணி உள்ளது.

இந்நிலைியல், பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியிடம் இலங்கை மோதவுள்ள நிலையில் ஜம்பவான் சனத் ஜெயசூர்யா ஆலோசனை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, நேர்மறையான கிரிக்கெட்டை விளையாடுங்கள், உங்களை நம்புங்கள் மற்றும் உங்கள் விளையாட்டில் மேல் நோக்கிச் செல்லுங்கள்! குட் லக் இலங்கை என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்