கோஹ்லியை கொடுங்கள் என கேட்ட பாகிஸ்தான் ரசிகர்கள்? வைரலாகும் புகைப்படத்தின் உண்மை

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் காஷ்மீர் வேண்டாம், கோஹ்லி வேண்டும் என்று பிடித்து வைத்திருந்த பேனர் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதன் உண்மை என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதனால் பாகிஸ்தான் அணியை அந்தணியின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் எங்களுக்கு காஷ்மீர் எங்களுக்கு வேண்டாம், விராட் கோஹ்லியை கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இது கடந்த 2018-ஆம் ஆண்டு காஷ்மீரில் நடந்த போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் எனவும், அதில் வேறொன்று எழுதியிருந்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்