இங்கிலாந்து அணி எப்போதுமே இப்படி தான்: இலங்கை பயிற்சியாளர் வெளிப்படை

Report Print Basu in கிரிக்கெட்

உலகக் கோப்பை தொடரில் எதிர்வரும் யூன் 21ம் திகதி ஹெடிங்லி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதவுள்ளன.

இலங்கை அணி வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து அணியின் பலவீனங்களை அறிந்து வைத்துள்ளதாக இலங்கை பந்து வீச்சு பயிற்சியாளர் ருமேஷ் ரத்னாயக்க கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, இங்கிலாந்து அணி மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையினை கொண்டுள்ளது. அவர்கள் எப்போதுமே எதிர்த்தாடவே முனைவார்கள்.

எனினும், இங்கிலாந்து அணி விளையாடுவதை நாங்கள் கண்காணித்துள்ளோம். அவர்கள் எந்ததெந்த பகுதிகளில் பலவீனமாக இருக்கின்றார்கள் என்பது தெரியும். அவர்கள் பலவீனமாக இருக்கும் பகுதிகள் குறைவு என்ற போதிலும், அவர்களிடம் இருக்கும் பலவீனத்தை எமக்கு சாதகமாக பயன்படுத்த வேண்டி உள்ளது.

இலங்கை அணி பந்துவீச்சாளர்களிடம் இருந்து இன்னும் நான் மிக அதிகமாக எதிர்பார்க்கின்றேன். இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என ருமேஷ் ரத்னாயக்க கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்