ரிஷப் பாண்ட் வெளியே... தவான் காயத்தால் தமிழக வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க வீரர் தவான் காயம் காரணமாக சில நாட்கள் ஓயவு எடுக்கவுள்ள நிலையில், இன்றைய நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் தமிழக வீரருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், அவர் 3 வார காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் செய்திகள் வெளியானது.

அதன் பின் அவரின் காயத்தை மீண்டும் சோதித்த நிலையில், அவர் முழு தொடரிலிருந்து விலக வாய்ப்பில்லை எனவும், இன்னும் சில நாட்களில் மீண்டும் அணிக்கு திரும்பிவிடுவார் என்று கூறப்பட்டது.

இதனால் அவர் வரும் வரை துவக்க வீரர் யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது ராகுல் துவக்க வீரராக இறக்கப்பட்டு, இளம் வீரர் ரிஷப்பாண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று இருந்த நிலையில், இன்றைய போட்டியில் ஆடும் இந்திய லெவன் அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர் நான்காம் இடத்தில் இறங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மைதானத்தில் ஈரப்பதம் காரணம் தற்போது டாஸ் போடப்படாததால், ஆடும் லெவன் அணி இன்னும் உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்