கடைசி வரை போராடி தோல்வியடைந்த பாகிஸ்தான்

Report Print Vijay Amburore in கிரிக்கெட்
535Shares

பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கிண்ணம் தொடரின் 17 வது லீக் போட்டியானது டான்டனில் இன்று நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 49 ஓவர்களிலே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து, 307 ரன்களை குவிந்திருந்தது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் 107 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில், பகர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார். மறுமுனையில் ஆடிய இமாம் உல் ஹக் 53 ரங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரை தொடர்ந்து பாபர் அசாம் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 46 ரன்னிலும், ஹசன் அலி 35 ரன்னிலும் அவுட்டாகினர்.

விக்கெட்டுகள் ஒரு பக்கம் பறிபோனாலும் களமிறங்கிய ஒவ்வொரு வீரரும் அணியின் வெற்றிக்காக தொடர்ந்து போராடினர்.

இறுதியில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவரில் 266 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்