5 விக்கெட்.! எதிரணியினரை திணற வைத்த அமீர்.. அவுஸ்திரேலியா ஆல்அவுட்

Report Print Basu in கிரிக்கெட்
234Shares

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 307 ஒட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டவுன்டன் நகரில் இன்று யூன் 12ம் திகதி நடைபெற்று வரும் 17வது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்களான ஆரோன் பின்ச், டேவிட் வார்னர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணி 146 ஓட்டங்களில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. பின்ச் 82 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக துடுப்பாடிய வார்னர் சதம் அடித்து அசத்தினர். எனினும், அவர் 107 ஓட்டங்களில் வெளியேறினார்.

அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 350 ஓட்டங்களுக்கு மேல் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்து களமிறங்கிய வீரர்கள் மளமளவென சரிந்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் (10), மேக்ஸ்வெல் (20), ஷான் மார்ஷ் (23), கவாஜா (18), அலெக்ஸ் கேரி (20), நாதன் கொல்டர்-நைல் (2), பாட் கம்மின்ஸ் (2), மிட்செல் ஸ்டார்க் (3) என ஆட்டமிழந்தனர். 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அவுஸ்திரேலியா அணி 307 ஓட்டங்கள் எடுத்தது.

மோசமான நிலையில் இருந்த பாகிஸ்தானை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் மீட்டார். 10 ஓவர் வீசிய அமீர் 30 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 10 ஓவரில் 2 ஓவர்கள் மெய்டின் என்பது குறிப்பிடத்தக்கது.

50 ஓவரில் 308 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கி விளையாட உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்