இனிமேல் தான் இலங்கைக்கு சிக்கல் ஆரம்பம்.. அணித்தலைவர் திமுத் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

எதிர்வரும் உலகக் கோப்பை போட்டிகளில் கட்டாயம் வெற்றிப்பெற வேண்டிய சூழலில் இலங்கை அணி உள்ளதாக இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 1 வெற்றி, 1 தோல்வி, 2 போட்டிகள் ரத்து என 4 புள்ளிகளுடன் ஐந்தவாது இடத்தில் இருக்கிறது. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் 9 போட்டிகளில் விளையாட வேண்டும், லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடத்தில் உள்ள அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிப்பெறும்.

எதிர்வரும் போட்டிகளில் இலங்கை அணி பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய, இங்கிலாந்து, தென் ஆப்பரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இந்தியாவுடன் மோதவுள்ளது.

இதுகுறித்து பேசி இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன கூறியதாவது, அரையிறுதிக்குத் தகுதிபெற வேண்டுமாயின் இனிவரும் அனைத்துப் போட்டிகளிலும் நாங்கள் வெற்றிபெற வேண்டும். வெற்றி பெறாமல் அடுத்த கட்டத்துக்குச் செல்வது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விடயமாகும். எமக்கு தற்போது நான்கு புள்ளிகள் உள்ளன.

அதேபோல, புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெறுவதற்கு இனிவரும் போட்டிகளில் 2 போட்டிகளிலாவது நாங்கள் வெற்றிபெற வேண்டும். அந்த சவால்தான் எமக்கு முன்னால் உள்ளது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுவதற்கு தான் விளையாடுவோம். எனவே, எஞ்சியுள்ள ஐந்து போட்டிகளில் இரண்டில் எப்படியாவது வெற்றி பெறுவதற்கு முயற்சிப்போம் எனக் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்