உலக கோப்பையை நிச்சயம் இந்தியா வெல்லும் - அஷ்வின் நம்பிக்கை

Report Print Abisha in கிரிக்கெட்

உலககோப்பை தொடரில் இந்திய அணி வெல்லும் என்று சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலககோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. அந்த அணியில் அஷ்வின் இடம்பெறவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், உலககோப்பையை இந்திய அணி வெல்லும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷிகர்தவான் விரைவில் குணமடைவார் என்றும், இவை அனைத்தையும் தாண்டி இந்திய அணி நிச்சயம் வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்