இன்று மோத உள்ள அவுஸ்திரேலியா, பாகிஸ்தான்: எந்த அணி வெல்லும்.?

Report Print Abisha in கிரிக்கெட்
158Shares

உலக கோப்பை போட்டியில் 14வது நாளான இன்று டவுன்டானில் நடைபெற உள்ள ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா அணியும், முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளன.

அவுஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 7விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தேற்கடித்தது. இரண்டாவது ஆட்டத்தில், 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ்-ஐ தோற்கடித்தது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

இதில், இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணியின் துடுப்பாட்டக்காரர்கள் சற்று தடுமாற்றத்தை சந்தித்தனர். வழக்கமான அந்த அணியின் அதிரடி ஆட்டத்தை காண முடியவில்லை. 1999-ஆம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி தோல்வியை சந்தித்தது இதுவே முதல் முறையாகும்.

எனவே அவுஸ்திரேலியா முந்தைய ஆட்டத்தில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு வர எல்லா வகையிலும் முயற்சிக்கும்.

பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடம் மோச மான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 14ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது. இலங்கைக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஒருசேர நேர்த்தியாக செயல்பட்டது.

அதேபோல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் என்று பாகிஸ்தான் அணி சூளுரைத்துள்ளது. எனவே இந்த ஆட்டம் குறித்து பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்