ஒரே போட்டியில் இரண்டு உலக சாதனை.. பட்டையை கிளப்பிய தல டோனி

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மகேந்திர சிங் டோனி, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரண்டு உலக சாதனை படைத்துள்ளார்.

சவுத்தாம்டன் மைதானத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா உடனான போட்டியில், இந்திய அணி பந்துவீச்சின்போது இந்திய வீரர் டோனி இரண்டு உலக சாதனைகளை படைத்தார்.

கீப்பராக 600 சர்வதேச இன்னிங்ஸில் செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்தப் பட்டியலில் டோனிக்கு அடுத்தப்படியாக பவுச்சர்- 596, சங்ககாரா- 499, கில்கிறிஸ்ட்-485 இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தென் ஆப்பரிக்கா உடனான போட்டியிலேயே, ஆட்டத்தின் 39.3-ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் பெலுக்வயோவை சாஹல் பந்துவீச்சில் டோனி ஸ்டெம்பிங் செய்தார். இதன்மூலம் 139 லிஸ்ட் ஏ ஸ்டெம்பிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் உலகக் கோப்பையில் விக்கட் கீப்பராக அதிக டிஸ்மிஸல் செய்தவர்கள் பட்டியலில் டோனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் நியூசிலாந்தின் மெக்கலத்தை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடித்தார். உலகக் கோப்பையில் அதிக டிஸ்மிஸல் செய்த விக்கட் கீப்பர்கள், சங்ககாரா- 54, கில்கிறிஸ்ட்- 52, டோனி- 33, மெக்கலம்- 32, பவுச்சர்- 31 இருக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்