எளிதான ஸ்டெம்பிங்கை தவறவிட்ட வங்கதேச விக்கெட் கீப்பர்.. திட்டி தீர்த்த ரசிகர்கள்... வைரலான வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில் வங்கதேச விக்கெட் கீப்பர் முஸ்பிகுர் ரஹீம் செய்த தவறு அவர் அணி தோற்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 244 ரன்கள் எடுத்தது. 245 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து விளையாடியது.

ஆட்டத்தின் 12வது ஓவரை நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் எதிர்கொண்டார்.

அப்போது எட்டு ரன்கள் மட்டுமே வில்லியம்சன் எடுத்திருந்த நிலையில் ரன் எடுக்க ஓடினார். அந்த சமயத்தில் வங்கதேச விக்கெட் கீப்பர் முஸ்பிகுர் ரஹீமை நோக்கி பீல்டர் பந்தை எறிந்தார்.

பந்தை வாங்கிய ரஹீம் ஸ்டெம்ப் மீது அதை அடிப்பதற்குள் அவர் முழங்கை ஸ்டெம்ப் மீது பட்டது. இதனால் அவுட்டாவதில் இருந்து வில்லியம்சன் தப்பித்தார்.

இதன் பின்னர் 40 ரன்கள் சேர்த்த வில்லியம்சன் அணி வெற்றிக்கு துணை புரிந்தார். எளிதான ஸ்டெம்பிங்கை தவறவிட்ட ரஹீமை ரசிகர்கள் சமூகவலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்