அடுத்த 15 நிமிடங்கள் என் கை நடுங்கி கொண்டே இருந்தது.. பும்ரா குறித்து கோஹ்லி

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீசும் திறன் குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி புகழாரம் சூட்டியுள்ளார்.

உலக கோப்பையில் தென் ஆப்பரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா, ஆரம்பத்திலே தென் ஆப்பிரிக்கா நட்சத்திர துடுப்பாட்டகாரர்களான அம்லா, டீ காக் விக்கெட்டை கைபற்றி அசத்தினார்.

பும்ரா பந்து வீச, டீ காக் தட்டி விட, ஸ்லிப்பில் இருந்த கோஹ்லி கண் இமைக்கும் நொடியில் கேட்ச் பிடித்தார். இந்த கேட்ச் குறித்து பேசிய கோஹ்லி, நான் கேட்ச் பிடித்த போது பந்தின் வேகத்தை உணர்ந்தேன்.

அடுத்த 15 நிமிடங்களுக்கு என் கை நடுங்கி கொண்டே இருந்தது. என் கையில் வலியை உணர்ந்தேன், அதை பும்ராவிடமே கூறினேன். அவர் அவ்வளவு வேகமாக பந்து வீசுகிறார் என பும்ராவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் கோஹ்லி.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்