அபார வெற்றி பெற்ற இந்தியா! சதமடித்த ரோகித் சர்மா பவுண்டரி, சிக்சர்களை விளாசிய வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் எதிரணி பந்துவீச்சை ரோகித் சர்மா அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி சவுதம்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இந்திய அணி 47.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அந்த அணியின் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்தார். இதில் பல பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் அவர் பறக்க விட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்