ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்ததற்கு காரணம் இதுதான்! இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தான் பிடித்த கேட்ச் ஒன்றும், தன்னுடைய சிறப்பான கேட்ச் என்று கூற முடியாது என இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் திருவிழா லண்டனில் நேற்று தொடங்கியது. போட்டியை நடத்தும் இங்கிலாந்து, தனது முதல் லீக் போட்டியில் 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் பிலுக்வாயோவின் அடித்த பந்தை எல்லைக் கோட்டின் அருகே ஒற்றைக் கையில் பிடித்து அசத்தினார்.

வர்ணனையாளராக அமர்ந்திருந்த இங்கிலாந்து முன்னாள் வீரர் டப்னல், இது நூற்றாண்டில் சிறப்பான கேட்ச் என வர்ணித்தார். அதனைத் தொடர்பான ஸ்டோக்ஸ் பிடித்த கேட்ச் வீடியோ வைரலாகியுள்ளது.

இந்நிலையில் கேட்ச் குறித்து ஸ்டோக்ஸ் கூறுகையில், ‘என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியில் நான் பிடித்த கேட்ச் தான் சிறந்த கேட்ச் என்று கூறவில்லை.

இதைக் காட்டிலும், கடந்த 2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் டிரண்ட் பிரிட்ஜ் நகரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடம் வோக்ஸ்க்கு எதிராக ஒரு கேட்ச் பிடித்தேன்.அது சிறந்தது.

ஆனால், அந்த கேட்ச் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டுமே சிறந்தது. இந்தப் போட்டியில் நான் பந்தை நான் தவறாகக் கணித்துவிட்டதால் தான் நான் பந்தை தாவிப்பிடிக்க வேண்டியதாகிவிட்டது.

நான் தவறான இடத்திலும் நின்று இருந்ததால், என்னால் பந்தை கணிக்க முடியவில்லை. சரியான இடத்தில் நின்றிருந்தால், அது வழக்கமான கேட்சாக இருந்திருக்கும்.

அதில் ரஷித் ஓவருக்கு அடுத்த ஓவரை நான் வீசிவிட்டு வந்தபோது, கேப்டன் மோர்கன் என்னிடம் வந்து, என்னுடைய இதயத்துடிப்பு குறைந்துவிட்டதா, உன்னுடைய கேட்ச் என் இதயத்துடிப்பை அதிகரித்துவிட்டது என தெரிவித்தார்.

இந்த கேட்சை பிடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு முயற்சித்தேன், அதுபோலவே நடந்தது. இதற்காக நான் சிரமப்படவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்