உலகக்கோப்பை போட்டியில் புதிய மைல்கல்லை எட்டிய இங்கிலாந்து கேப்டன்!

Report Print Kabilan in கிரிக்கெட்

நேற்று நடந்த உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில், இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் புதிய மைல்கல்லை எட்டினார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கன் 60 பந்துகளில் 57 ஓட்டங்கள் விளாசினார். இதன்மூலம், ஒருநாள் போட்டிகளில் 7,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

அவர் 222 போட்டிகளில் 12 சதங்கள், 46 அரைசதங்களுடன் 7,034 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 124 ஆகும். மேலும் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து வீரர்களில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள வீரராகவும் மோர்கன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்