தலையை தாக்கிய பந்தால் நிலைகுலைந்த ஆம்லா... பாதியில் வெளியேறிய பரிதாபம்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா காயமடைந்து வெளியேறினார்.

உலகக்கோப்பையின் முதல் லீக் போட்டி, லண்டனில் உள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

நாணயச் சுழற்சி வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி ஸ்டோக்ஸ்(89), மோர்கன்(57), ஜேசன் ராய்(54) மற்றும் ஜோ ரூட்(51) ஆகியோரின் அதிரடியால் 311 ஓட்டங்கள் குவித்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், தொடக்க வீரர் ஹசிம் ஆம்லா இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் வீசிய பந்தில் காயமடைந்தார். இன்னிங்சின் 4வது ஓவரில், 144.8 கிலோ மீற்றர் வேகத்தில் ஆர்ச்சர் பந்துவீசியதால், அது ஆம்லாவின் தலையில் கடுமையாக தாக்கியது.

இதனால் நிலைகுலைந்துபோன ஆம்லா துடுப்பாட்டம் செய்ய முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல் விழுந்தன.

பின்னர் மீண்டும் களமிறங்கிய ஆம்லா 13 ஓட்டங்களில் அவுட் ஆனார். முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 39.5 ஓவரில் 207 ஓட்டங்களுக்கு சுருண்டது. டி காக் அதிகபட்சமாக 68 ஓட்டங்கள் எடுத்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்