உலகக்கோப்யைில் இக்கட்டான நேரத்தில் இவர்கள் தான் எங்களுக்கு உதவி... விராட் ஓபன் டாக்

Report Print Basu in கிரிக்கெட்

ரசிகர்களின் எதிர்பார்ப்பு, உற்சாகம் மற்றும் அன்பு தான் இக்கட்டான நேரத்தில் உதவுவதாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணித்தலைவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பேசிய விராட் கோஹ்லி, சிறு வயதில் தான் உலகக் கோப்பையை தொலைக்காட்சியில் கண்டு ரசித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது, தினசரி அடிப்படையில் இளம் குழந்தைகளுக்கு, ஒரு முன்மாதிரியாக மற்றும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும், செயல்திறனை விட அது முக்கியமானது.

நாங்கள் பல சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறோம், அதனால், பல அழுத்தங்களை சந்தித்துள்ளோம். ஆனால், உலகக்கோப்பை முற்றிலும் மாறுபட்டது. 1.3 பில்லியன் மக்கள் உங்கள் பின்னால் இருக்கின்றார்கள் என்பதே ஒரு மாறுபட்ட உணர்வு. இது ஒரு பெருமையான உணர்வு அதற்கு நிகர் எதுவும் இல்லை.

நாங்கள் எங்கள் திறன்களை பூர்த்தி செய்து, ரசிகர் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை காட்ட வேண்டும், முக்கியமாக நாட்டிற்காக செய்ய வேண்டும். எதிர்பார்ப்பு, உற்சாகம் ரசிகர்களுக்கு எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறோம், மேலும் அந்த விஷயங்கள் அழுத்தம் நிறைந்த தருணங்களில் எங்களுக்கு உதவுகின்றன.

முதல் முறையாக விளையாடும் வீரர்கள், ரசிகர்களிடமிருந்து வரும் அன்பு மற்றும் ஆற்றலைப் உணர்வார்கள், இது ஒரு அழகான விஷயம் என கோஹ்லி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்