உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு? கேப்டன்களின் கணிப்பு இதுதான்

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்து தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு அணி கேப்டன்களும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தங்களது கணிப்பை தெரிவித்துள்ளனர்.

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்பாக தற்போது ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், அனைத்து அணியின் கேப்டன்களும் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. குறிப்பாக உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒவ்வொரு அணி கேப்டனும் அளித்த பதிலை இங்கு பார்ப்போம்.

கருணரத்னே (இலங்கை)

இலங்கை அணி கேப்டன் கருணரத்னே கூறுகையில், ‘நாங்கள் சற்று முன்னதாகவே இங்கு வந்தோம். இங்குள்ள சூழலைப் புரிந்துகொள்ள இது உதவும். நாங்கள் கடந்த காலங்களில், இங்கிலாந்து மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களின் Best-ஐ கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

விராட் கோஹ்லி (இந்தியா)

இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில், ‘நாங்கள் எங்கு விளையாடினாலும், எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. அனைத்து அணிகளுக்கும் எதிராக ஒருமுறைதான் மோதுவோம். இதுதான் சவாலான விடயம். இது எனது கருத்து’ என தெரிவித்துள்ளார்.

சர்ஃப்ராஸ் அகமது (பாகிஸ்தான்)

பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கூறுகையில், ‘ரசிகர்கள் இங்கு தரமான கிரிக்கெட்டைப் பார்க்க உள்ளனர். பாகிஸ்தானின் இங்கிலாந்து சுற்றுப்பயணங்களைப் பார்த்தால் தெரியும் பாகிஸ்தான், இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது என்று. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சிறப்பாக விளையாடுவோம்’ என தெரிவித்துள்ளார்.

இயான் மோர்கன் (இங்கிலாந்து)

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், ‘யார் கோப்பையை வெல்வார்கள் என்று எனக்கு சுத்தமாக எந்த யோசனையும் இல்லை. இங்கு ஓர் அணி, மற்ற அணியை விட சிறந்தது என சொல்ல முடியாது. சொந்த மண்ணில் விளையாடுவது நல்ல விடயம் தான். ரசிகர்கள் ஆதரவு இருக்கும்.’ என தெரிவித்துள்ளார்.

ஆரோன் பின்ச் (அவுஸ்திரேலியா)

அவுஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் கூறுகையில், ‘என்னைப் பொறுத்தவரையில் இங்கிலாந்து அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல ஃபார்மில் இருக்கிறது, இந்தியாவும் தான். இங்கிலாந்து அணிக்குக் கூடுதல் வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். எங்கள் அணியிலும் கடந்த முறை உலகக்கோப்பையை வென்றபோது, அணியில் இருந்த 6 பேரும் தற்போதும் உள்ளனர்.

இது ஒரு நல்ல விடயம். ஆனால் விளையாட ஆரம்பித்த பின்னர் அழுத்தம் இருக்கும். அதை சமாளித்து ஆட வேண்டும். மொத்தத்தில் இரு ஒரு நல்ல தொடராக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து)

நியூசிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘கடந்த உலகக்கோப்பையில் விளையாடிய சில வீரர்கள் இன்னும் எங்கள் அணியில் இருக்கிறார்கள். இந்த அனுபவம் எங்களுக்கு உதவும். போட்டி நாளில் எதுவும் நடக்கலாம். அதுதான் போட்டியின் சுவாரஸ்யமும் கூட’ என தெரிவித்துள்ளார்.

பாப் டூ பிளீசிஸ் (தென் ஆப்பிரிக்கா)

தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பாப் டூ பிளீசிஸ் கூறுகையில், ‘உள்ளூர் அணியில் ஆதிக்கம் இருக்கும் என்பது கிடையாது. மற்ற கேப்டன்கள் கூறியதைப் போன்று, இந்த தொடரை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ஒருமுறைதான் விளையாட இருக்கிறோம். இது நிச்சயம் சிறப்பான தொடராக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

மோர்தசா (வங்க தேசம்)

வங்க தேச அணி கேப்டன் மோர்தசா கூறுகையில், ‘எங்கள் அணி சிறப்பாக இருக்கிறது. இதுவரையில் இருந்ததில் இது சிறந்த அணி என நான் நினைக்கிறேன். நிறைய இளம் வீரர்கள் அணியில் உள்ளனர். அவர்களின் ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

குல்பதீன் நையீப் (ஆப்கானிஸ்தான்)

ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் குல்பதீன் கூறுகையில், ‘எங்கள் நாட்டில் தற்போது அமைதி நிலவுகிறது. அதற்கு கிரிக்கெட்டுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு நல்ல கிரிக்கெட்டை வழங்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிக அளவிலான ரசிகர்களின் முன்னால் விளையாடுவதற்கு ஆர்வமாக இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்