தென் ஆப்பிரிக்கா அதிரடி... இமலய இலக்கை விரட்டும் இலங்கை

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 338 ஓட்டங்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 2வது பயிற்சி போட்டி இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே வேல்ஸில் உள்ள சோபியா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 21 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹாசிம் அம்லா மற்றும் டு பிளசிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு தென் ஆப்பிரிக்கா அணி 338 ஓட்டங்கள் குவித்தது. அந்த அணியில் அதிக பட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 88 ஓட்டங்கள் குவித்தார். அம்லா 65, டஸன் 40 மற்றும் அண்டிலி 35 ஓட்டங்கள் சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த டிவைன் மற்றும் மோரிஸ் தலா 13 பந்துகளில் 25 மற்றும் 26 ஓட்டங்கள எடுத்தனர். இலங்கை அணியில் லக்மால் மற்றும் பிரதீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

தற்போது 339 என்ற கடினமான இலக்கை எதிர்த்து இலங்கை அணி துடுப்பாடி வருகிறது. தொடக்கத்திலேயே அந்த அணியில் குசல் பெராரா மற்றும் திரிமன்னே ஆகிய இரண்டு பேரும் 0 மற்றும் 10 என்ற ஓட்டங்களில் வெளியேறி சொதப்பினர். 13 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த 72 ஓட்டங்கள் எடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் லுங்கி நிகிடி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்