இந்த மூன்று அணிகளுமே மிகவும் வலுவானவை! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேச கேப்டன்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் மோத உள்ள தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளும் மிகவும் வலுவானவை என வங்கதேச கிரிக்கெட் அணி கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ள கருத்து அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

வங்கதேச கிரிக்கெட் அணி சமீபத்தில் நடந்த அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இதனால் உலகக்கோப்பை தொடரில் தங்களது அணியின் ஆட்டம் மிக சிறப்பாக இருக்கும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் மோர்தசா தெரிவித்துள்ள கருத்து, வங்கதேச ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி தான் விளையாடும் முதல் மூன்று போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை சந்திக்க எதிர்கொள்கிறது.

இது குறித்து அணியின் கேப்டன் மோர்தசா கூறுகையில், ‘தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, அதிரடி இங்கிலாந்துடன் முதல் 3 போட்டிகள். இந்த 3 அணிகளுமே மிகவும் வலுவானவை. இவர்களுக்கு எதிராக வெற்றி பெறுவது என்பது சுலபமல்ல.

கடந்த 5-7 ஆண்டுகளாக ரசிகர்கள் நாங்கள் வெற்றி பெறுவோம், பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் போட்டிகளைப் பார்க்க வருகின்றனர். ஆனால், நான் அவர்களுக்கு கூறுவதெல்லாம் உலகக்கோப்பை என்பது வேறு ஒரு ஆட்டத்தொடர்.

இங்கிலாந்தில் கிரிக்கெட்டைப் பின் தொடர்பவர்களுக்கு தெரியும் ஓட்டங்கள் குவிக்கப்படுகின்றன இங்கு. இதற்கு வேறொரு அணுகுமுறை தேவை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்