டோனி லிஸ்டிலேயே இல்ல.. இவங்க 4 பேரு தான் உலகக்கோப்பையில கெத்து: முன்னாள் நட்சத்திரம்

Report Print Basu in கிரிக்கெட்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் கலக்கபோகும் நான்கு இந்திய வீரர்கள் பட்டியலை இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 30ம் திகதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தொடங்கவுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் கலக்கபோகும் நான்கு இந்திய வீரர்களின் பெயரை முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார். அதில் கோஹ்லி, ரோஹித் சர்மா, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

குறிப்பாக பும்ரா பந்து வீச்சு தான் இந்திய அணியின் பயணத்தை முடிவு செய்யும் என கம்பீர் குறிப்பிட்டுள்ளார். கம்பீரின் நட்சத்திர வீரர்கள் பட்டியலில் டோனி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers