சச்சின் பந்துவீச்சை கலாய்த்த ஐசிசி.. திருப்பி சச்சின் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Basu in கிரிக்கெட்

தான் பந்து வீசுவதை கலாய்த்த ஐசிசி-யை சச்சின் தன் பாணியில் திருப்பி கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் பயிற்சி முகாமில் தன் நண்பர் வினோத் காம்ப்ளிக்கு பந்து வீசினார். தான் பந்து வீசும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

வீடியோவை கண்ட ஐசிசி, சச்சின் நோ-பால் வீசியதை குறிக்கும் வகையில், புகழ் பெற்ற அம்பயராக விளங்கிய ஸ்டீவ் பக்னர் நோ-பால் காட்டும் புகைப்படத்தை சேர்த்து கமெண்ட் செய்தனர்.

இதற்கு சரியான பதிலடி அளிக்கும் வகையில் "நல்லவேளை இப்ப நான் பௌலிங் செய்றேன்.. பேட்டிங் ஆடலை.. அம்பயர் முடிவுதான் இறுதி முடிவு" என சச்சின் பதிலளித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்