உலகக்கோப்பைக்கு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஏன்? மெளனம் கலைத்த கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை எடுத்தது ஏன் என்பது குறித்து முதல் முறையாக கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் தற்போது தான் முடிவு பெற்றுள்ளதால், இந்திய வீரர்கள் சற்று ஓய்வில் உள்ளனர். விரைவில் அவர்கள் பயிற்சியை துவங்கவுள்ளனர்.

இந்நிலையில் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இளம் வீரர் ரிஷப்பாண்ட் தேர்வு செய்யப்படாததால், பலரும் அது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு தேர்வு குழுத் தலைவர் பிரசாத், தினேஷ் கார்த்திக்கின் அனுபவம், கண்டிப்பாக அணிக்கு தேவைப்படும் என்பதாலும், டோனிக்கு மாற்று கீப்பர் மட்டுமே என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் கோஹ்லி இதைப் பற்றி இதுவரை எதுவும் கூறாமல் இருந்த நிலையில், தற்போது அதைப் பற்றி பேசியுள்ளர்.

அதில், நெருக்கடியான சூழல்களை நிதானமாக கையாண்டு ஆடக்கூடியவர் தினேஷ் கார்த்திக். அதுமட்டுமல்லாமல் நீண்ட நெடிய அனுபவம் வாய்ந்தவர்.

ஒருவேளை டோனி ஆடமுடியாத சூழல் ஏற்பட்டால் அனுபவம் வாய்ந்த விக்கெட் கீப்பர் தேவை. மேலும் ஒரு நல்ல பினிஷராகவும் தினேஷ் செயல்பட்டுள்ளார். இவையெல்லாம்தான் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers