சியாட் விருதுகள் அறிவிப்பு: சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்ட கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

Ceat கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறந்த வீரர் விருதை பெறுகிறார்.

நேற்றைய தினம் Ceat கிரிக்கெட் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

கடந்த 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில், முக்கிய வீரராக திகழ்ந்த மொஹிந்தர் அமர்நாத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சுனில் கவாஸ்கர் அவருக்கு இந்த விருதினை வழங்கினார். சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாராவுக்கும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது ரோஹித் ஷர்மாவுக்கும் வழங்கப்பட்டது.

CEAT

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி சிறந்த வீரர் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீரர் ஆகிய இரு விருதுகளை பெற்றார்.

சிறந்த பந்துவீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா தெரிவு செய்யப்பட்டார். சிறந்த டி20 வீரருக்கான விருது ஆரோன் பிஞ்ச்-க்கு வழங்கப்பட்டது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராக குல்தீப் யாதவ் மற்றும் சிறந்த டி20 பந்துவீச்சாளராக ரஷீத் கான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மகளிர் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா, சிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனை விருதைப் பெற்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers