அவர் பந்தை சேதப்படுத்தவில்லை.. ஐசிசியின் அறிவிப்பால் தப்பிய இங்கிலாந்து வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது போட்டியில் ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்திய செயலில் ஈடுபடவில்லை என்று ஐ.சி.சி உறுதிபடுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் சவுத்தாம்ப்டனில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 373 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 361 ஓட்டங்கள் குவித்து 12 ஓட்டங்களில் தோல்வியைத் தழுவியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ப்ளங்கெட், பந்தை நகத்தால் சுரண்டியது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர் பந்தை சேதப்படுத்தியதாக பேச்சு எழுந்த நிலையில், போட்டிக்கான அதிகாரிகள் குறித்த வீடியோவை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து ப்ளங்கெட் தவறு செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக ஐ.சி.சி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ப்ளங்கெட் பந்தை சேதப்படுத்தும் விதமான எந்தவொரு செயலிலும் ஈடுபடவில்லை. பந்தை சேதப்படுத்தினாரா? என்பதை ஓவர்-பை-ஓவராக போட்டிக்கான அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். பின்னர் அவ்வாறு செய்யவில்லை என்பது உறுதி செய்தனர்’ என தெரிவித்துள்ளது.

எனவே, ப்ளங்கெட் உலகக் கோப்பைக்கான அணியில் விளையாடுவதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிய வந்துள்ளது.

ICC

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers