இளம் வீரரை புகழ்நது தள்ளிய சச்சின்-ஜெயவர்தனே: யார் அந்த இளம் வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

கிரிக்கெட்டில் உலகில் ஜாம்பவான்களான சச்சின் - ஜெயவர்தனே மும்பை அணியில் விளையாடிய இளம் வீரர் ஒருவரை புகழ்ந்து பேசியுள்ளனர்.

சென்னைக்கு எதிரான இறுதி போட்டியில் 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாஹரை தான் அந்த புகழுக்குறியவர்.

ராகுல் சாஹர் அவரது முதல் போட்டியை விளையாடுவதற்கு முன்பே, அவர் அபாரமான திறமைசாலி என்று ஜெயவர்தனேவிடம் கூறினேன். 6வது ஓவர் முதல் 15வது ஓவர் வரையிலான மிடில் ஓவர்களில் ஸ்லிப்பை நிறுத்தி பந்து வீசுகிறார். அது சாதாரண விஷயமல்ல.

முக்கியமான போட்டியில் அபாரமாக வீசியுள்ளார், எதிர்காலத்தில் சிறந்த வீரராக திகழ்வார் என இறுதிப்போட்டிக்கு பின்னர் பேசிய மும்பை அணியின் ஜம்பவான் சச்சின் டெண்டுல்கர், ராகுல் சாஹரை பாராட்டி தள்ளியுள்ளார்.

இந்த சீசன் முழுவதுமே ராகுல் அபாரமாக வீசினார். எதிரணிகளுக்கு நெருக்கடியை உருவாக்கி வெற்றிக்கு வழிவகுத்தார் என மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே பாராட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers