உடை மாற்றும் அறையில் மும்பை வீரர்களுடன் மஹலே பகிர்ந்த கருத்துகள்: வெளியானது வீடியோ

Report Print Basu in கிரிக்கெட்

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னைக்கு எதிரான வெற்றிக்கு பின் உடை மாற்றும் அறையில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹலே ஜெயவர்த்தனே வீரர்களுடன் கலந்துரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவில் நீத்த அம்பானி உட்பட மும்பை வீரர்களுடன் கலந்துரையாடும் மஹலே கூறியதாவது, இன்று நாம் ஒருபோதும் கைவிடவில்லை, ஆம் நாம் தவறுகள் செய்தோம். ஆனால், மீண்டும் திரும்பி வந்தோம், அதுதான் முக்கியம். இதுபோன்ற, கலச்சாரத்தை தான் நீங்கள் உருவாக்க வேண்டும்.

இந்த சீசன் முழுவதும் அனைவருமே தங்கள் கையை உயர்த்தினார்கள். ஆம், நம்மிடம் பர்ப்பில் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை. ஆனால், யாருக்கு கவலை, நம்மிடம் சாம்பியன் கோப்பையே உள்ளது என மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் மஹலே ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers