மும்பை அணியின் கொண்டாட்டத்தில் தனியாக நின்ற யுவ்ராஜ் சிங்! வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் வெற்றிக் கொண்டாட்டத்தில் மும்பை அணி வீரர் யுவ்ராஜ் சிங் தனியாக நிற்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

நேற்று நடந்த ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சென்னையை அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. எனினும், மும்பை ரசிகர்களில் பலர் யுவ்ராஜ் சிங் அணியில் இல்லாதது வருத்தம் தான் என தெரிவித்திருந்தனர்.

மும்பை அணியின் முதல் லீக் போட்டியிலேயே யுவ்ராஜ் சிங் 35 பந்துகளில் 50 ஓட்டங்களும், அடுத்த போட்டியில் 12 பந்துகளில் 23 ஓட்டங்களும் விளாசினார். ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் சரியாக விளையாடாததால், அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததுடன் இறுதிப்போட்டியிலும் அவரால் விளையாட முடியாமல் போனது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றுவிட்டது. அதன் பின்னர் அந்த அணியின் வீரர்கள் கோப்பையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து, உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது யுவ்ராஜ் சிங் மட்டும் சற்று தள்ளி தனிமையில் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை ரசிகர்கள் பலர், யுவ்ராஜ் சிங் அணியுடன் சேர்ந்து நிற்க முடியாத மனநிலையில் இருந்தார் என்றும், அவர் தனிமைபடுத்தப்பட்டதாகவும் ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers