பொல்லார்டுக்கு சோகத்தில் முடிந்த ஐபிஎல் இறுதிப்போட்டி.. இதான் நடந்தது

Report Print Basu in கிரிக்கெட்

ஐதராபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் போது நடுவரின் முடிவால் அதிருப்தியடைந்த மும்பை நட்சத்திர வீரர் பொல்லார்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 1 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. முதலில் களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான நிலையில் இருந்து. நிதானமாக இறுதிவரை விளையாடிய பொல்லார்டு 41 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி ஓவரை சென்னை வீரர் பிராவே வீச பொல்லார்டு துடுப்பாடினார். முதல் இரண்டு பந்தையும் அகல பந்து என நினைத்து பொல்லார்டு விட்டுவிட்டார். ஆனால், நடுவர் அகல பந்து என கொடுக்கவில்லை, இதனால், அதிருப்தியடைந்த பொல்லார்டு துடுப்பை மேலே வீசி பிடித்தார்.

பின்னர், அடுத்த பந்து வீச பிராவே ஓடி வர, நகர்ந்து சென்ற பொல்லார்டு ஆடுகளத்தை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து களநடுவர்கள் பொல்லார்டு-யிடம் கலந்துரையாடினர்.

எனினும், தொடர்ந்து துடுப்பாடிய பொல்லார்டு, கடைசி இரண்டு பந்துகளையும் பவுண்டரி அடித்து மும்பை அணி 148 ஓட்டங்கள் எடுக்க முக்கிய காரணமாக திகழ்நதார்.

இந்நிலையில், போட்டியின் போது நடுவரின் முடிவால் அதிருப்தியடைந்து துடுப்பை மேலே வீசி பிடித்த பொல்லார்டுக்கு அவரது போட்டிச் சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers