மும்பை அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது டோனியின் ரன்-அவுட் தான்! ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்

Report Print Kabilan in கிரிக்கெட்

ஆட்டத்தின் முக்கிய தருணமே டோனியின் ரன்-அவுட் தான் என்று மும்பை கிரிக்கெட் அணியின் ஐகான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணித்தலைவர் டோனியின் ரன்-அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டோனி அவுட் இல்லை என்று கூறி, சென்னை ரசிகர்கள் அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

டோனி அணியை வெற்றி பெற வைப்பார் என்று சென்னை அணி ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையில், அவரது ரன்-அவுட் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

‘ஆட்டத்தின் முக்கிய தருணமே டோனியின் ரன்-அவுட் தான். அதுதான் மும்பை அணிக்கு முக்கிய திருப்பமாக அமைந்தது. அதேபோல் இக்கட்டான நேரத்தில் பும்ரா சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக மலிங்கா வீசிய 16வது ஓவருக்குப் பிறகு வீசிய பும்ரா, துடுப்பாட்ட வீரருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

மலிங்கா சிறப்பாக ஆட்டத்தை முடித்து வைத்தார். கடைசிக் கட்டத்தில் அவரது பந்துவீச்சு நன்றாக இருந்தது. ஒரு சில இறுதிப்போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். ஒரு பயங்கரமான அணி எங்களுக்குக் கிடைத்துள்ளது. அனுபவமும், அதேநேரம் இளைஞர்கள் நிறைந்த அணியாகவும் கிடைத்துள்ளது.

PTI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...