அது சுலபமானதல்ல.. அந்த வலியை நானும் அனுபவித்திருக்கிறேன்! முன்னாள் இந்திய வீரர் லக்‌ஷ்மண் உருக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்

உலகக்கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு இடம் பெறாமல் போனதன் வலி எனக்கு தெரியும், நானும் அதை அனுபவித்திருக்கிறேன் என்று முன்னாள் இந்திய வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் அம்பத்தி ராயுடு இடம்பெறவில்லை. அதேபோல் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார். இதனால் அணித்தேர்வு குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

குறிப்பாக, 4வது இடத்திற்கான போட்டியில் அம்பத்தி ராயுடுவிற்கு பதிலாக, தமிழக வீரர் விஜய் ஷங்கர் தேர்வு செய்யப்பட்டது பல தரப்பிலும் கேள்விகளை எழுப்பியது. அத்துடன் விஜய் ஷங்கர் தேர்வு குறித்து அம்பத்தி ராயுடுவும் விமர்சித்தார்.

இந்நிலையில், இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் கூறுகையில்,

‘இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது நிச்சயமாக அம்பத்தி ராயுடுவிற்கு பெரிய ஏமாற்றம் தான். ஏனெனில் அவர் அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்று நானும் எதிர்பார்த்தேன். ஆனால் நடந்ததோ வேறு.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், மேற்கிந்திய தீவுகள் தொடரில் இருந்து ராயுடு அணியில் 4வது வீரராக பேட்டிங் செய்தார். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டார். அந்த தொடரில் அதிக ஓட்டங்களையும் எடுத்தார்.

அனுபவம் அவருக்கு இருந்தும் ஏன் அவரை எடுக்கவில்லை என்பது ஆச்சரியம். இது மிகவும் வலி நிறைந்த தருணம். அந்த வலியை நானும் 2003ஆம் ஆண்டில் எதிர்கொண்டிருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்.

சர்வதேச வீரர்கள் இது போன்ற வலியிலிருந்து கடந்து வருவார்கள். நிச்சயம் அம்பத்தி ராயுடுவும் கடந்து வருவார். அந்த நம்பிக்கை எனக்கும் உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்