டோனி தற்போது எப்படி இருக்கிறார்? விளையாடுவாரா? பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

சென்னை அணியின் தலைவரான டோனி தற்போது குணமடைந்து வருவதாகவும், போட்டி துவங்குவதற்கு முன்பு தான் அதைப் பற்றி கூற முடியும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் முதல் ஆளாக சென்ன அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து டெல்லி அணி இரண்டாவதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால், மூன்றாவது மற்றும் நான்காவது அணி தான் யார் என்பதில் இப்போது மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், கொல்கத்தா போன்ற அணிகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை அணியின் தலைவரான டோனி, நடைபெற்று முடிந்த மும்பை அணிக்கெதிரான போட்டியில் விளையாடவில்லை. இதனால் சென்னை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதை விட, முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம், ஏனெனில் அப்போது தான் அந்தணிக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்.

அதனால் வரும் போட்டிகளில் டோனி கட்டாயம் விளையாட வேண்டும், என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் டோனியின் நிலை எப்படி இருக்கிறது? அவருக்கு என்ன தான் ஆனது என்று சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

டோனிக்கு காய்ச்சல் மற்றும் முதுகு வலி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது குணமடைந்து பயிற்சியில் ஈடுபடுகிறார்.

முழு குணமடைவது குறித்து அணியின் மருத்துவர் பரிசோதித்து வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடுவதற்கு முன்பாக தான் கூறமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்