மழையால் பாதியில் ரத்தான போட்டி... பரிதாபமாக வெளியேறிய கோஹ்லி அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானதால், கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி வெளியேறியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூர்-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தெரிவு செய்தார்.

அதன்படி பெங்களூரு அணி முதலில் துடுப்பாட்டம் செய்தது. ஆனால், மழை பெய்ததால் 3 மணிநேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

தொடக்க வீரர்களாக டி வில்லியர்ஸ்-கோஹ்லி களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய கோஹ்லி 7 பந்துகளில் 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 25 ஓட்டங்கள் விளாசிய நிலையில் கோபால் பந்துவீச்சில் அவுட் ஆனார்.

அதன் பின்னர், அதே ஓவரில் 10 ஓட்டங்கள் எடுத்து டி வில்லியர்ஸ் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்ததால், கோபால் ஹாட்ரிக் விக்கெட் சாதனை படைத்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் தலா ஒரு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணி 5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 41 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது.

BCCI

BCCI

இதனால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். சாம்சன் 13 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லிவிங்ஸ்டன் 11 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். இதனைத் தொடர்ந்து இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

ஆனால், பெங்களூரு அணி நூலிழையில் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. அதே சமயம் ராஜஸ்தான் அணிக்கும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்