தலைநிமிர்ந்து வர வெட்கமாக இருந்தது.. தவறான முடிவுகளை எடுக்கிறார்கள்! அணி நிர்வாகத்தையே குற்றஞ்சாட்டும் ரஸல்

Report Print Kabilan in கிரிக்கெட்

அணி நிர்வாகம் தவறான முடிவுகளை எடுத்ததே தோல்விக்கு காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரஸல் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரம்பத்தில் வெற்றிகளை பெற்று வந்தது. அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ரஸல் இருந்தார். அவரது பந்துவீச்சு, துடுப்பாட்டம் மற்றும் பீல்டிங் சிறப்பாக இருக்கிறது. ஆனால், மற்ற வீரர்களின் பங்களிப்பு சமஅளவு இல்லாததால், கொல்கத்தா அணி விளையாடிய கடைசி 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் ரஸல் தனது அணி குறித்து கூறுகையில், ‘நாங்கள் சிறந்த அணி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், தவறான முடிவுகளை நீங்கள் எடுத்தால், எப்போதும் போட்டியில் தோல்வி அடைவீர்கள், அதைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.

எங்களுக்கு போதுமான அளவு கால அவகாசம் இருந்தது. சில முக்கியமான போட்டிகளை மட்டும் குறிப்பிட்டு அந்த போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி சரியாக பந்துவீசி, சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து, பேட் செய்து, பீல்டிங் செய்திருந்தாலே போட்டிகளை இழந்திருக்க வேண்டியதில்லை. வெற்றி பெற்றிருப்போம்.

தொழில்முறையாக கிரிக்கெட் விளையாடும் எனக்கு அணியில் கொடுக்கப்பட்ட இடம், களமிறங்கிய இடம் ஆரோக்கியமானதாக இல்லை. முடிவுகளின்படி, தவறான நேரத்தில், தவறாக பந்துவீசினோம். அதன் காரணமாகத்தான் நாங்கள் எளிதாக தோல்வி அடைய காரணமாக அமைந்தது. நாங்கள் பேட்டிங்கில் தடுமாறுகிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் பேட்டிங்கில் நாங்கள் தடுமாறவில்லை.

நாங்கள் நல்ல ஸ்கோரை பெறும்போது அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். ஆனால், மோசமான பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீசினால், உண்மையாகவே உங்களால் கேட்சுகளை பிடிக்க முடியாது என்றால்... மோசமாக பீல்டிங் செய்தால்... ஒட்டுமொத்தமாக அணியின் சூழல் ஆரோக்கியமாக இல்லை. அதனால், தொடர்ந்து நான் அறைக்குள்ளேயே முடங்கி இருக்கிறேன்.

எங்களுக்கு நல்ல பயிற்சிகள் இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து உறுதி செய்து வருகிறோம். கடந்த போட்டிகளில் தோல்வியுற்றதால், கடந்த இரு நாட்களாக நான் அறைக்குள்ளே முடங்கி இருந்தேன். என்னால் 6 போட்டிகளில் தோல்வி அடைந்து தலைநிமிர்ந்து மைதானத்தை சுற்றி வர வெட்கமாக இருந்தது.

ஆனால், உறுதியாக கூறுகிறேன் அடுத்த ஆட்டத்தில் எனது உணர்ச்சிவேகம், 150 ஆக இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரராக எனக்கு இருக்கும் பற்றை டிவியில் காட்டமுடியாது களத்தில் தான் காட்டுவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...