டோனி இல்லாமல் பரிதாபமாக தோல்வியடைந்த சென்னை அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

சென்னை அணிக்கெதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான 44வது லீக் போட்டியானது சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை அணியின் கேப்டன் டோனி மற்றும் ஜடேஜா உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 155 ரன்கள் குவித்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 67 ரன்கள் குவித்திருந்தார். சென்னை அணியில் மிட்செல் சாண்ட்னர் 2 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர், தீபக் சஹார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்திருந்தனர்.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.

17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு சென்னை அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாபமாக தோல்வியடைந்தது.

சென்னை அணியில் ஆறுதல் அளிக்கும் விதமாக முரளி விஜய் மட்டும் 38 ரன்கள் குவித்திருந்தார். மும்பை அணியின் லசித் மலிங்கா 4 விக்கெட்டுகளையும், குணால் பாண்டியா, ஜாஸ்ரிட் பம்ரா 2 விக்கெட்டுகளையும், ஹார்டிக் பாண்டியா, அனுகுல் ராய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்