மிரட்டி வரும் ஐபிஎல் 2019... நான்கு வாரத்தில் மட்டும் எத்தனை பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா? இதோ புள்ளி விவரம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை நான்கு வாரத்தில் மட்டும் எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற தகவலை ஸ்டார் இந்தியா அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.

இந்த போட்டியில் எப்போதும் போல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஆளாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு மட்டும் தொடர் துவங்கி நான்கு வாரங்களே ஆகியுள்ள நிலையில், நான்கு வாரங்கள் மட்டும் ஐபிஎல் தொடரை மொத்தம் எத்தனை பேர் பார்த்துள்ளனர் என்ற தகவலை ஸ்டார் இந்தியா அறிவித்துள்ளது.

அதன் படி, முதல் 4 வாரங்களில் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார்’ வழியாக 41,10,00,000 பேர் கண்டுகளித்திருப்பதாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 52 சதவீதம் எனவும் கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது பெண் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2018-ஆம் ஆண்டில், ஒரு கிரிக்கெட் போட்டியை சராசரியாக 8,80,000 பெண்கள் பார்த்திருக்கிறார்கள். அது நடப்பு தொடரில் 10,10,000 அதிகரித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அனைத்து மொழி ரசிகர்களும் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக, தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்