வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கிறது: தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வேதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

ராஜஸ்தான் அணியிடம் தோல்வியடைந்தது ஏமாற்றம் அளிக்கிறது என கொல்கத்தா அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 50 பந்தில் 97 ஓட்டங்கள் விளாசினார். இந்நிலையில் தோல்வி குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில்,

‘இந்த தோல்வி சிறிது ஏமாற்றம் அளிக்கிறது. வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். ஆனால் எங்களது நாளாக அமையவில்லை. வெற்றி பெறும்போது எப்போதுமே நல்ல உணர்வை அளிக்கும். ஆனால் வெற்றிக்கு அருகில் வந்து தோற்கும்போது ஏமாற்றம் அளிக்கும்.

கடைசி ஓவரில் 2வது பந்தில் ஆர்ச்சர் நல்ல ஷாட் அடித்தார். ஆனால் முதல் பந்தில் எட்ஜ் ஆகி பவுண்டரி சென்று விட்டது. இதனால் இலக்கை எட்டுவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது. பந்துவீச்சாளர்கள் மீது அதிக நெருக்கடியை திணிக்க முடியாது.

பனியின் தாக்கத்தால் பந்து ஈரப்பதமானது. எங்களது அணி வீரர்கள் போராடிய விதத்தை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் முடிவை கண்டு மகிழ்ச்சி அடையவில்லை. உடை மாற்றும் அறையில் நல்ல சூழ்நிலையை வைத்திருப்பது முக்கியமானது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் வெற்றி எல்லையை அடைய முடியாதது எங்களுக்கு நல்ல உணர்வை அளிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்